in

சிவகங்கை ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா

சிவகங்கை ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா

 

சிவகங்கை ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

இவ்விழா முருகப்பெருமானுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று வந்தன விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பால்குடம் அலகு குத்துதல் காவடி எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.

முன்னதாக நகர் கௌரி விநாயகர் திருக்கோவிலில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு குத்துதல் மயில் காவடி பறவை காவடி எடுத்து மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து கோவிலை அடைந்தனர்.

தொடர்ந்து முருக பெருமானுக்கு நேர்த்திக்கடநை செலுத்தினர் பின்னர் பக்தர்கள் சமர்ப்பித்த பால் கொண்டு முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷங்கள் முழங்க பாலபிஷேகம் செய்யப்பட்டது. நிறைவாக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

What do you think?

சிவகங்கை ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

விஜய்…யை தாறுமாறாக திட்டிய ரஜினிகாந்த் ரசிகர்