காரைக்காலில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
காரைக்காலில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை மூலம் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக புதுவை மாநில ஊரக வாழ்வாதார திட்ட பயனாளிகளுக்கு விதைகளை ஆட்சியர் வழங்கினார். பின் பேசிய மாவட்ட ஆட்சியர் அனைத்து செயல்களிலும் ஆண்கள் பெண்கள் வேறுபடுத்தி பார்க்காமல் அனைவரும் சமம் என்று நினைக்க வேண்டும்.
மேலும் தற்போது அனைத்திலும் பாலின வேறுபாடுகள் இன்றி சமமாக இருக்கிறோம் இது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் அது நமது கடமையாகும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் இப்பேரணியில் நாட்டு நல்பணித் திட்ட கல்லூரி மாணவர்கள், வட்டார வளர்ச்சித்துறை சுய உதவிக்குழு மகளிர்கள் என 1000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்டச் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரை சென்றனர்.