ரசிகை…யின்னா இப்படி இருக்கனும்… கொடுத்து வைத்த நடிகர்
பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய் தத்தை தாறுமாறாக காதலித்த ரசிகை ஒருவர் தனது சொத்துக்களை அவருக்கு எழுதி கொடுத்தது அதிர்ச்சியின் உச்சம்.
நடிகர் சஞ்சய் தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்றவர் தண்டனை காலம் முடிந்து தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹிந்தி தாண்டி தற்பொழுது தமிழ் தெலுகு, கன்னடம் போன்ற படங்களிலும் நடிக்கிறார். சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை ஒருவர் திருமணம் செய்தால் சஞ்சய்…யை தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்து கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் 62 வது வயதில் இறந்திருக்கிறார்.
இவர் இறப்பதற்கு முன்பு சஞ்சய் மீது உள்ள அதிதீவிர காதலால் தனது 72 கோடி சொத்துகளை சஞ்சய் தத்திற்கு கொடுத்து விடும் படி வங்கியின் மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த வங்கி அதிகாரிகள் காவல்துறையினர் சஞ்சய் ..யை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை கூற சஞ்சய் தத்துவம் நிஷா பாட்டீலின் காதலை அறிந்து அதிர்ந்தவர் பாட்டீல் எப்படி இருப்பார் என்று கூட எனக்கு தெரியாது ஆனால் அவர் இறப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது, நம்ம கிட்ட இல்லாத சொத்தா? நமக்கு எதற்கு சொத்து என்று அவரது குடும்பத்திற்கே சொத்துக்களை திருப்பி கிடைக்க வழி செய்துள்ளார் சஞ்சய் தத்.