மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் சோழவந்தான் தொகுதி சார்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டை வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் கடந்த 11,12 ம்தேதி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு இன்று 16ம்தேதி சோழவந்தான் தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன் ( மதிமுக) இந்த ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும் 500 வீரர்களும்
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது.
தற்போது இந்த கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்கள் என அனைத்து காளைகளுக்கும், வீர்ர்களுக்கும் சைக்கிள், பீரோ, மிக்ஸி,அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கபடுகிறது. ஜல்லிக்கட்டு பங்கேற்க்கும் அனைத்து காளைகளக்கும் டிபன் பாக்ஸ் நினைவு பரிசாக வழங்கப்படுகிறது.