வசூலில் பட்டையை கிளப்பும் சாவா
விக்கி கவுசல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவா படம் தற்பொழுது வசலில் பட்டையை கிளப்பி வருகிறது .
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மரணம், மராட்டிய சாம்ராஜ்யத்தை உலுக்கிய தருணத்திலிருந்து படம் துவங்குகிறது.
அவரது தந்தையின் பாரம்பரியத்தில் அடியெடுத்து வைக்கும் சம்பாஜி (விக்கி கௌஷல்) முகலாயர்களின் மிகவும் வலிமையான கோட்டைகளில் ஒன்றான புர்ஹான்பூர் மீது துணிச்சலான தாக்குதலை நடத்துகிறார்.
கோபமடைந்த ஔரங்கசீப் (அக்ஷயே கண்ணா) மராட்டியர்களை ஒருமுறை நசுக்குவதற்கான வாய்ப்பாக இதைப் பார்க்கிறார். ஆனால் போர்க்களத்தில் சாம்பாஜியின் புத்திசாலித்தனம் வலிமைமிக்க முகலாய சாம்ராஜ்யத்தை விளிம்பில் நிற்க வைக்கிறது .
சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் கதையையும், முகலாயர்களுக்கு எதிரான போர்களையும் அற்புதமாக இயக்கியவர் இயக்குனர் லக்ஷ்மண் உடேகர், படத்தின் பிரம்மாண்டம், ராஷ்மிகா மந்தனாவின் மகாராணி யேசுபாய் போஸ்லே மற்றும் அக்ஷயே கண்ணாவை ஔரங்கசீப்பாக சித்தரித்தது, காட்சிக்கு காட்சிக்கு பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால், சாவா ரசிகர்களின் இதயத்தை கட்டி இழுத்து விட்டது.
130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு நாளிலேயே 100 கோடியை தாண்டி விட்டது. இனிவரும் நாளில் வசூலில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்கலாம்.