ஒரே நாளில் வெளியாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் டிராகன்….
இரண்டு காதல் படங்கள் தமிழ் திரைகளில் தென்றலாக விரைவில் வீசவருகிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் டிராகன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
வரும் வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து இயக்குகிறார் தனுஷ்.
பிரியா பிரகாஷ் வாரியர், பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், வெங்கடேஷ் மேனன் மற்றும் பல புதிய முகங்கள் மற்றும் அறிமுக நடிகர்கள் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை விநியோகிக்கிறது.
டிராகன் என்ற மற்றொரு படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ளார். அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை போலவே, டிராகனும் காதல் மற்றும் அதன் மனவேதனைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கூறுகிறது, பள்ளிப் படிப்புக்குப் பிறகு, கதாநாயகன் தனது கல்லூரிப் பருவத்தில் நுழைகிறார், அங்கு அவர் விசித்திரமானவராகவும், கட்டுப்பாடற்றவராகவும், சுற்றி திரிகிறார்.
சக மாணவியான அனுபமா பரமேஸ்வரனுடன் காதல் மலர்கிறது, காதலியால் தோல்வியுற்றவர். மனவேதனையுடன் ஏற்படும் போராட்டமான வாழ்கை… இறுதியில் கதாநாயகன் மாறினாரா என்பதை மையமாகக் கொண்டு எடுக்கபட்டது டிராகனை. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது, இசையை லியோன் ஜேம்ஸ் அமைத்துள்ளார்.