கங்குவா நஷ்டத்தை ஈடுக்கட்ட சூர்யா எடுத்த முடிவு … Workout… ஆகுமா?
மிகுந்த பொருட்செலவில் வெளியான கங்குவா படம் படுதோல்வி அடைந்த நிலையில் கங்கா படத்தை ஆஸ்கர்க்கு அனுப்பி வைத்தனர் அங்கேயும் படத்தை ஏகத்துக்கு கழுவி ஊற்றி அனுப்பியதால் நொந்து போன ஞானவேல் ராஜா …வை ஆறுதல் படுத்த சூர்யா தற்போது ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம்.
ப்ரோமோஷனில் ஓவர் பில்டப் கொடுத்தது தான் கங்குவாவின் படத்திற்கு பெரும் பின்னடைவு..வுக்கு காரணம் எதிர்பார்ப்புடன் போன ரசிகர்களுக்கு பல்பு கொடுத்தது கங்குவா படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு சம்பளம் எதுவும் வாங்காமல் இன்னொரு படம் நடித்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
படத்தின் ரிலீசுக்கு பின்னர் வரும் லாபத்தை வைத்து சம்பளத்தை முடிவு செய்யலாம் என்று கூறிவிட்டாராம்.
ஏற்கனவே ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடித்த 24 படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அதை சரி கட்ட கங்குவா படத்தில் சூர்யா நடித்தார்.
தற்பொழுது அந்த படமும் அடிவாங்கியதால் அடுத்த படத்தில் இணைய முடிவு செய்து இருக்கிறார். அடுத்த படத்தையாவது ஞானவேல் ராஜா ஒழுங்க எடுக்குராரா பார்ப்போம்?