கடலூர் மாவட்டம் கடலூரில் திருபாதிரி புலியூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இன்று 146 ஆண்டுகள் கடந்து வந்ததை யெட்டி இன்று நூற்றாண்டுத் திருவிழாவில் பள்ளியில் படித்த மாணவிகள் பங்கேற்ப்பு
கடலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நூற்றாண்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது
பள்ளி முதல்வர் இந்திரா தலமையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு திருவிழாவில் இப்பள்ளியில் படித்து இன்று மேயராக உள்ள திருமதி சுந்தரி ராஜா மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஜயப்பன்
கடலூர் வர்த்தக சங்க தலைவர் திரு.துரைராஜ் நாயுடு சிகரத்தை தொட்ட சிங்க பெண்மணி முத்தமிழ்செல்வி மாவட்ட கல்வி அலுவலர்
ஞான சங்கர் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும்
பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் இன்னிகழ்ச்சியில் இப்பள்ளியில் படித்த சிகரத்தை தொட்ட சிங்க பெண்மணி திருமதி. N முத்தமிழ்செல்வியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கடலூர் மேயர் சுந்தரிராஜா பேசுகையில் நான் இப்பள்ளியில் படித்த மாணவி என்று தன் நினைவுகளை நினவு கூர்ந்தார் அதே போல் சட்டமன்ற உறுப்பினர் கோ ஜயப்பன் பேசுகையில் உங்களுக்கு பள்ளி வளர்ச்சிக் தேவையான நிதியை என்னுடை சட்டமன்ற நிதியில் பெற்று தருவதாகவும் அரசு பள்ளி மாணவிகள் ஒழுக்கத்துடன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் என கூறினார்
வார்த்தக சங்க தலைவர் தம்புராஜ் பேசுகையில் படிப்பறிவு இருந்தால் மட்டுமே பெண்கள் வாழ்வாதாரத்தில் உயர்நிலை அடைய முடியும் என வாழ்த்தினர் இன்னிகழ்ச்சியில் பங்கேற்ற சிகரம் தொட்ட சிங்க பெண்மணி முத்தமிழ்செல்வி அவர்கள் பேசுகையில் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று இமயமலையில ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்வி பேசினார்
விழாவில் மாணவிகளின் பாரத நாட்டியம் கிராமிய கலை நிகழ்ச்சியும்
சிலம்பாட்டம் இசை நிகழ்ச்சிஎன மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன