in

ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடினர்

ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடினர்

 

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினத்தில் பேரக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனத்தின் ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இவ்விழாவிற்கு ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை ஏற்று கல்லூரி இயக்குனர் சாந்திபூபதியுடன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபதி பள்ளி இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலையில்

பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினா கணபதி வரவேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை புகழ் யோ யோ கலந்து கொண்டு தாத்தா பாட்டிகளுக்கு பலவகை விளையாட்டு போட்டிகள் நடத்தினார்.

இவ்விழாவில் தாத்தா பாட்டிகள் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி போன்றும் நடித்து காட்டினர்.

தங்களுடைய தாத்தா பாட்டிகள் நடித்த நிகழ்ச்சிகளையும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் கண்டு பள்ளி குழந்தைகள் ரசித்து மகிழ்ந்தனர்.

மேலும் தங்கள் பேரக் குழந்தைகளுடன் தாத்தா பாட்டிகள் கூடையில் பந்து எறிதல் போன்ற பல்வேறு  விளையாட்டு மற்றும் ஆடல், பாடல் என மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் பொன்னான நேரத்தை பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடி மகிழ்ந்தனர்.

தாத்தா பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த தருணத்தில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உடனடி நினைவாக அந்த இடத்திலேயே குழு புகைப்படம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற தாத்தா பட்டியலுக்கு கல்லூரி தாளாளர் ரங்கபூபதி செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சரண்யாஸ்ரீபதி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

இந் நிகழ்ச்சியை ஆசிரியை லாவன்யா ஒருங்கிணைத்து வழங்கினார்.

விழாவின் முடிவில் முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.

மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சுமதி, அனிதா, பிரவீனா மற்றும் சௌமியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வயதான காலத்தில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தாத்தா பாட்டிகளுக்கு இப்பள்ளியில் தங்கள் பேரக் குழந்தைகளுடன் விளையாடும் விழாவாக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு தாத்தா பாட்டிகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்…

What do you think?

சுப்பிரமணியபுரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்களால் பரபரப்பு

தொண்டியில் சட்ட மன்ற உறுப்பினரின் தாத்தா காலத்தில் கட்டிய அங்கன்வாடி