in

ஸ்ரீ அன்னை பிறந்த தினம். அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் ..

ஸ்ரீ அன்னை பிறந்த தினம். அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் ..

 

மகான் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

பிரான்ஸ் நாட்டை சார்ந்த மீர்ரா அல்போன்சா. அரவிந்தருக்கு பின்னால் ஆஷ்ரமத்தை நிர்வகித்து வந்த இவர் பிறந்த தினம் பிப்ரவரி 21.

இதனை ஆசிரமவாசிகளும் ஆசிரம பக்தர்களும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது சமாதிக்கு மலர்களை வைத்து பக்தர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டு தியான நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநில சேர்ந்த ஆசிரம பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆரோவில்லில் மாத்திர் மந்திர் எதிரில் அதிகாலையில் கூட்டு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆரோவில் வாசிகளும் வெளிநாட்டவரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

What do you think?

மின்சார கம்பி அறுந்து விழுந்ததை எதிர்பாராத விதமாக மிதித்த பெண்

பிரத்தியங்கரா தேவிக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பலாயாகம்