அமலாக்கத்துறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறது… இயக்குனர் சங்கர் குற்றச்சாட்டு
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படத்தின் கதை ஆரூர் தமிழ்நாடன், கதையிலிருந்து எடுக்கப்பட்டதாக சங்கருக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணையை தொடங்கிய அமலாக்க துறையினர் ஷங்கரின் 10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை நேற்று முடக்கியது அமலாக்கத்துறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக இயக்குனர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எந்திரன் கதை உரிமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே கோர்ட் தீர்பளித்துள்ளது. அமலாக்க துறையினர் கோர்ட் தீர்ப்பை புறக்கணித்து எனது சொத்துக்களை முடக்கி இருக்கின்றனர்.
எனது சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக துறை இதுவரை எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை ஆனால் அதற்குள் ஊடகங்களில் இந்த செய்தி பரவி விட்டது.
எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் அப்படி எடுக்க தவறினால் மேல்முறையீடு செய்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார்.