ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி தெப்ப உற்சவம்
ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி தெப்ப உற்சவம். ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம். ஏராளமான பக்தா்கள் தாிசனம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்து. சுமாா் 800 வருடங்கள் மிகப்பழமையான இத் திருக்கோயிலில் மூலவா் ஸ்ரீ வேதநாராயணா், விமானத்தில் ஸ்ரீஅழகிய மன்னாா் மற்றும் உற்சவா் ஸ்ரீராஜகோபாலா் என 3 நிலைகளில் காட்சிதந்து அருள்பாலித்து வருகின்றாா்.
இங்கு ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. இத் திரக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இப்பினும் மாசி மாதம் தெப்போற்ச்சவம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக இன்று காலையில் திருக்கோயிவ் நடைதிறக்கப்பட்டதும் காலைசந்தி நடைபெற்றன.
தொடா்ந்து ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலருக்கு வாஸ்து ஹோமம் நடைபெற்றது. மஞ்சள் பால் தயிா் இளநீா் பஞ்சாமிருதம் சந்தனம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் இராஜ அலங்காரத்தில் திருக்கோயிலிருந்து தெப்பத்திற்கு ஏழுந்தருளினாா். பிரபந்தப் பாராயணம், சிறுமிகள் கோலாட்டம், மங்கள இசையுடன் வீதி உலா நடைபெற்றது.
ஸ்ரீராமசுவாமி திருக்கோயிலை அடைந்ததும் அங்கு ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் சுவாமிகள் இராஜகோபாலரை மங்களாசாசனம் செய்தாா். பிரபந்த கோஷ்டி நடைபெற்றது. ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் கட்டி மதலை அணிவித்து சடாாி மாியாதை செய்யப்பட்டது.
அதனை தொடா்ந்து வண் விளக்குகளாலும் பூக்களால் அலங்காிக்ப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி ஏழுந்தருளினாா். தெப்பத்தில் ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருள மங்கள இசை, பிரபந்த பாராயணத்துடன் 11 முறை வலம் வந்தது.
பக்தா்கள் தெப்ப குளத்தில் விளக்குகள் ஏற்றி பெருமாளை வழிபட்டனா். தெப்பத்திருவிழாவிற்காக கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காிக்கப்ட்டு இருந்தது. திரளான பக்தா்கள் ஸ்ரீராஜகோபாலரை தெப்பத்தில் தாிசித்து அருள்பெற்றனா்.