பண மோசடியில் சிக்கிய மெர்ச்சி செந்தில்
நடிகர் மெர்ச்சி செந்தில் தற்பொழுது அண்ணா சீரியலில் ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் அறிமுகமானவர் அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்று சீரியல் நடித்தார்.
தற்பொழுது ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் செந்தில் தான் சைபர் கிரைமில் பணம் இழந்து விட்டதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்ஸ் அப் நம்பரில் மெசேஜ் அனுப்பி 15,000 ரூபாய் கேட்டிருந்தார் நானும் டிரைவிங்கில் இருந்ததால் அந்த நம்பருக்கு உடனே 15 ஆயிரம் அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு பார்க்கும்போது அது வேறு யாரோ ஒரு நபர். போன் செய்து கேட்டபோது வாட்ஸ் அப் Spam என்ற தகவல் கிடைத்தது. இதுபோல் எனக்கு 500 பேர் கால் செய்துள்ளார்கள். பணத்தை இழந்துவிட்டேன் தற்பொழுது போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.