மேல்மலையனூரில் மாசி திருவிழா பணி துவங்கி தயார் நிலையில் திருத்தேர்
மேல்மலையனூரில் மாசி திருவிழாவிற்கு புதியதேர் செய்யும் பணி துவங்கி தயார் நிலையில் திருத்தேர்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
இத் திருத்தலம் உலகில் உள்ள அனைத்து அங்காளம்மன் திருக்கோவிலுக்கும் தலைமை பீடமாகவும் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய திருத்தலமாக விளங்குகிறது.
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மாசிபெருவிழா விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பெருவிழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 10ம் தேதி நிறைவடைகிறது.
விழாவின் முக்கிய திருவிழாவான சக்திகரகம் மயானக் கொள்ளை தீ மிதி திருவிழா மற்றும் திருத்தேரோட்டம் வரும் மார்ச் 4- ஆம் நடைபெற உள்ளது.
இத்திருத்தலத்தில் திரு தேரோட்டத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் பச்சை பனை மரத்தால் புதிய தேர் செய்வது வழக்கம். இத்தேரினை பூசாரிகள் படைத்தேர் என்று அழைப்பார்கள்.
தேர் செய்வதற்காக சக்கரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு இதற்காக சக்கரங்களுக்கு பூசாரிகள் சிறப்பு பூஜை செய்து தேர் செய்யும் பணியை துவக்கி வைத்து பச்சை பனமரத்தினால் திருத்தேர் செய்யப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும்
கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் 7 தலைமுறை பூசாரிகள் செய்து வருகின்றனர்.