in

திருத்துறைப்பூண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி ரயில் தலைப்பில் 22. 2.205 முதல் மூன்று நாட்களாக சுமார் 140 லாரிகள் நெல்மூட்டை லோடுடன் வேகன் வரும் என்று காத்து நிற்கின்றது இதுவரையில் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு எந்த விதமான முயற்சியும் செய்யாமல் திருத்துறைப்பூண்டியை மிகவும் பாரபட்சமாக பார்க்கும் திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அவர்களை கண்டித்தும்

திருத்துறைப்பூண்டி பகுதிக்கு அதிக ரயில்வே வேகன்களை பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினுடைய நெல் அரிசி கோதுமை போன்ற பொருட்களை ஏற்ற இறக்க நிரந்தரமாக ஏற்பாடு செய்ய வேண்டும்

அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் எப்பொழுதும் வைக்கப்படும் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளான கீழப்பாண்டி சுந்தரபுரி மற்றும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபாண்டி குடோன் ஆகியவற்றில் நெல் சேமிப்பு செய்கிற அதிகாரிகளை அமைத்து உத்தரவிட வேண்டும்

நெடுங்காலமாக பொறிக்க வைத்து செயல்படாத கோவிலூர் குடோன் சாலைகளை செப்பனிட்டு உரிய வடிகால் வசதி செய்து மழைநீர் தேங்காத வண்ணம் வாகனங்கள் பழுதின்றி செயல்பட உதவிட வேண்டும்

கடந்த 12 ஆண்டுகளாக இயங்காத டி என் சி எஸ் சி க்கு சொந்தமான எடை மேடையை சரி செய்யாமல் காலதாமதம் செய்து பலமுறை முறையிட்டும் சரிவர பதிலளிக்காத நிர்வாகத்தை கண்டித்தும் திருத்துறைப்பூண்டி ரயில் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர் சங்கம் மற்றும் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று அல்லது நாளை காலை ரயில் வேகன்கள் வந்து நெல் மூட்டைகளை ஏற்ற வில்லை என்றால் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

முன்றாவது முறை விபத்திற்குள்ளான அஜீத்

திருவாரூரில் நகர கழகம் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா