in

நடிகர் பாண்டியன் பற்றி அவரது மகன் ரகு


Watch – YouTube Click

நடிகர் பாண்டியன் பற்றி அவரது மகன் ரகு

நடிகர் பாண்டியன் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமானார்.

80களில் பாப்புலர் ஆன குணச்சித்திர நடிகராக இருந்தவர் பாண்டியன். சில படங்களை Produce பண்ணவர் பெரும் நஷ்டம் ஏற்பட்டு தனது சொத்துகளை விற்றார்.

அவடைய மகன் ரகு தன் தந்தை பற்றி அளித்த பேட்டியின் தொகுப்பை பார்க்கலாம். அப்பா என்னை விட்டு போன பிறகு எனக்கு அவர் மேல் நிறைய கோபம் ஏனென்றால் எனக்கு பண கஷ்டம்தெரியாமல் வளர்த்து விட்டார் நான் எதைக் கேட்டாலும் உடனே வாங்கி தந்துருவார் அவர் இறந்ததுக்கு அப்புறம் தான் நான் சம்பாதிக்கணும் குடும்பத்தை பார்க்கனும் என்றெல்லாம் எனக்கு தோணுகிறது.

அப்பா இறந்த பிறகு பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், அவருடைய இறுதி சடங்கு மதுரையில் வைக்கப்பட்டதால் ராதாரவி, சரத்குமார், ராமராஜன் அங்கிள் மட்டும் வந்தார்கள்.

திரை பிரபலங்கள் யாரும் அவ்வளவாக கலந்து கொள்ளவில்லை. அவருக்கு லிவர் ஃபெயிலியர் ஆனதும் மூன்று முறை அவரை நாங்கள் காப்பாற்றினோம் அவர் இறந்து விடுவார்..இன்னு எங்களுக்கு தெரியும் அவர் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தை நல்லா படி நல்லா வேலை பாரு வீட்ல இருக்குற அம்மா பாட்டியை நல்லா பாத்துக்கோ உன்கூட நான் கடைசி வரை வரமாட்டேன் உன் படிப்பு தான் வரும்.

இனி கவனமாக இரு என்னை மாதிரி நீ குடிக்காதே அப்படின்னு சொன்னார் உன்னால இவ்வளோ உயரத்துக்கு போக முடியுமா அந்த அளவிற்கு வாழ்க்கையில் உயர்வதற்கு முயற்சி செய் நான் கடவுளாக இருந்து உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

Silent…டாக படத்தை முடித்த விஜய் சேதுபதி

சம்பளம் வாங்காமல் நடிக்கும் பாலிவுட் நடிகர்