ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் ஆடித்திருவிழா மாசி திருவிழா
கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள், மற்றும் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்துவதால் திருவிழா காலங்களில் சாமி சுற்றி வருவதில் சிரமம்.
அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதக்கூடிய ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில், ஆடித்திருவிழா மாசி திருவிழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம், இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாசத் திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
மாசித் திருவிழாவின் போது நாள்தோறும் காலை மாலை என இரு வேலைகளிலும் சுவாமி அம்பாள் ரத விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சுவாமி அம்பாள் ரத வீதிகளை சுற்றி வரும்போது கடைகளின் ஆக்கிரமிப்புகளாலும் , இருசக்கர வாகனங்களை சாலையோரம் 2 பகுதிகளிலும் ஆங்காங்கே நிறுத்துவதாலும் சாமி சுற்றிவர சிரமம் ஏற்படுகிறது.
நேற்று மாலை சுவாமி அம்பாள் முத்தங்கி சேவையில் புறப்பாடாகி ரதவீதியில் வலம் வரும்போது மிகுந்த போக்குவரத்துக்கு இடையே வலம் வந்தது, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் திருவிழா காலங்களில் கூடுதல் காவலர்களை நியமித்து கோவில் ரதவீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்து விடாமல் ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.