சீரியல் நடிகையின் நகையை திருடிய போலிசார்
சின்னத்திரை சீரியலில் சிறிய வேடங்களில் நடிப்பவர் ரேணுகா இவர் மைசூரில் இருந்து சென்னைக்கு காவேரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவருடன் அந்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த ஒருவர் ரேணுகா பையில் நகை வைத்திருப்பதை அறிந்து பையை கைப்பற்ற முயற்சி செய்திருக்கிறார்.
அவர் கைப்பையை திருடி சென்று ஓடும் பொழுது ரேணுகா சத்தம் போட அந்த ரயிலில் அவருடன் பயணம் செய்த பயணிகள் அவரை வளைத்து பிடித்து இருக்கின்றனர்.
உடனே Train…னை பயணிகள் நிறுத்த, ரயில்வே அதிகாரிகளிடம் ட்ரெயினில் ஒருவர் பையை திருடிவிட்டதாகவும் அந்த நபரை போலீசாரிடம்’ ஒப்படைப்பதற்காகவே Train நிறுத்தியதாக கூறினார்.
ரேணுகா பிடிபட்ட நபர் வசந்த் குமார் என்றும் அவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார் என்று தெரிந்தவுடன் அவரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.