நடிகை விஜயலட்சுமியை விசாரித்த போலீசார்
சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி, தன்னுடன் உறவு கொண்டதாக விஜயலட்சுமி குற்றம் சாட்டினார்.
சீமான் மீது புகார் ஒன்றை 2011 ஆம் ஆண்டு ராமாபுரம் போலீசில் நிலையத்தில் பதிவு செய்திருந்தார்.
நாம் தமிழர் கட்சி (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகர் விஜயலக் பதிவு செய்த குற்றப் புகாரை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கு விசாரித்த நீதிபதி12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசருக்கு உத்தரவிட்ட நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் இருவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேகரித்தனர் இன்று சீமான் போலீஸ் நிலையத்திற்கு ஆஜராகுமாறு சீமானுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சீமான் விசாரணைக்கு ஆஜராவாரா? சீமான் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்.