கிரிப்டோகரன்சி மோசடி … தமன்னா மற்றும் காஜல் அகர்வாளுக்கு சம்மன்அனுப்பிய போலீஸ்
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறுகிய காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும்படி தற்பொழுது விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்க அதனை நம்பி பலர் பணத்தை இழந்த நிலையில் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த பிஎஸ்என்எல் அதிகாரி அசோகன் தனது செல்லுக்கு வந்த குறுஞ்செய்தியில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவலை நம்பி 98 ஆயிரம் முதலீடு செய்தார்.
அது 9 கோடி லாபம் கிடைத்ததாக காண்பிக்க அதனை தனது அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய முற்பட்டார் முடியாத நிலையில் தான் மோசம் அடைந்ததை உணர்ந்தவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
விசாரணையில் இறங்கிய போலீசார் கோவையில் வாஷ்பே என்ற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கோவையை சேர்ந்த நிதிஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய இரண்டு பேரும் நேற்று கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெண்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் அறிந்து தற்பொழுது அவர்களையும்’ கைது செய்ய தனிப்படை அமைத்துஇருகின்றனர்.
இந்நிலையில் வாஷ்பே நிறுவன விழாவில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பிரபல நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வால் பங்கேற்றனர் இவர்களை நம்பி பலர் பணத்தை முதலீடு செய்தனர் இவர்களுக்கு இந்த விழாவில் பங்கேற்பதற்காக பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது.
குற்றவாளிகளின் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்டதா என்று விசாரணை நடத்திய சைபர் போலீசார் இவர்களையும் விசாரணைக்கு ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.