ராஜமௌலி..யால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது
இயக்குனர் ராஜமௌலி பற்றி அவரது நெருங்கிய நண்பர் அளித்துள்ள குற்றச்சாட்டு தற்பொழுது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி .
இவர் தற்பொழுது மகேஷ் பாபுவை வைத்து வரலாற்று படம் இயக்கி வருகிறார்.
ராஜமௌலியின் நண்பர் சீனிவாச ராவ் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் இதற்கு காரணம் காதல் தோல்வி தான் காரணம் இது ஒரு பெண்ணால் வந்த பிரச்சனை அவர் என் வாழ்க்கையை நாசமாகிவிட்டார் என்று புலம்பி இருக்கிறார்.
ராஜமௌலி எனக்கு 34 வருடங்களாக தெரியும் நான் ஒரு பெண்ணை சீரியஸாக காதலித்து வந்தேன் அந்தப் பெண்ணை விட்டுக் கொடுக்கும்படி என்னிடம் ராஜமௌலி கூறினார்.
ஆரம்பத்தில் எனது சினிமா வாழ்க்கை கெட்டுப் போகக்கூடாது என்பதற்காக நான் காதலை விட்டுக் கொடுத்தேன் எனது காதலியும் என்னை விட்டு சென்றுவிட்டார். ராஜமொழியால் என் வாழ்க்கையே பறிபோய்விட்டது என்று வீடியோ ஆதாரங்களோடு காணொளியை வெளியிட்டுள்ளார் அவரது நண்பர்.