குத்தாலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்
குத்தாலத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் குத்தாலம் பேரூர் மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பாக குத்தாலம் கடைவீதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் முன்னிலையில் குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் கோசி மணி சிலைக்கும் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதேபோல் குத்தாலம் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுகவினர் ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.