in

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி உற்சவ விழா

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி உற்சவ விழா

 

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி உற்சவ விழாவை முன்னிட்டு பூக்கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மாசி உற்சவ மாசி களரி உற்சவ விழாவை முன்னிட்டு பூ கரகம் மற்றும் முளைப்பாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக மூலவர் திரௌபதி அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்கள் அருள்பாலித்தார்.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர் நகர் தெப்பக்குளத்தில் இருந்து அம்மன் பூ கரகத்தை அலங்கரித்து தலையில் சுமந்து ஊர்வலமாக வலம் வந்தனர் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக வலம் வந்தனர்.

பூ கரக ஊர்வலம் மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து கோவிலை அடைந்தது நிறைவாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் அம்மனுக்கு பூ கரகம் முளைப்பாரிகளை சமர்ப்பித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

தென்காசி மாவட்டத்தில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை – குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

கிரிப்டோப கரன்சி மோசடி..விளக்கம் அளித்த தமன்னா