in

காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைப்பு

காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைப்பு

 

மாணவிகள் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினால் காவல்துறையின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா எச்சரிக்கை.

சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக தொடர் பாலியல் சீண்டல் சம்பவம் நடைபெற்று வருவதை பள்ளி மாணவிகள் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளதை தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க போலீசார் மாவட்டம் முழுவதும் பள்ளி வளாகத்தில் புகார் பெட்டிகளை வைக்க இன்று காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றம் கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் பள்ளிகளில் வைக்க புகார் பெட்டிகளை மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா வழங்கினார்.

புகார் பெட்டிகளின் சாவி என்னிடம் உள்ளது வார வாரம் பெட்டியில் உள்ள புகார்களை ரகசியமாக விசாரித்து மாணவிகளிடம் பிரச்சனையில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவிகளின் புகார் மீது அலட்சியம் காட்டினால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What do you think?

விஜய் மக்களை அழிக்கும் பாதரசம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தையும்‌ நலத்திட்டங்களையும் ரங்கோலியாக அசத்தல்