in

தமிழக முதலமைச்சர் அவருக்கு வண்ணக்கோலமிட்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த பொதுமக்கள்

தமிழக முதலமைச்சர் அவருக்கு வண்ணக்கோலமிட்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த பொதுமக்கள்

 

தமிழக முதலமைச்சர் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த பொதுமக்கள்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூராட்சி செஞ்சி நகர இளைஞரணி சார்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 -வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் வண்ண கோலமிட்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

செஞ்சி பேரூராட்சி 1-வது வார்டில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலையில் பெண்கள் தங்களது வீட்டின் வாசல்களில் தண்ணீர் தெளித்து முதலமைச்சர் வாழ்க என்றும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து என்றும் பல வண்ணங்களில் கோலமிட்டு மகிழ்ந்தனர்.

அதேபோல் ஒன்றிய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் தமிழ் வாழ்க இந்தி ஒழிக,ஹிந்தி வேணாம் போடா என்ற வாசகத்துடன் பெண்கள் கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் முதலமைச்சருக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்து கோலமிட்டதையும், தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக என எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்டதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்.

பேரூராட்சி தலைவருடன் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் ,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி,நகர இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன்,வார்டு செயலாளர் ராமச்சந்திரன் நிர்வாகிகள் பன்னீர்,நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள்உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

அப்போது அங்கிருந்தகுழந்தைகள் முதலமைச்சர் ஸ்டாலின் தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவமும், பொதுமக்கள் மும்மொழி கொள்கை மூலம் தமிழகத்தில் தேவையில்லாத இந்திய திணிக்க முயற்சிப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளதாகவும் என்றும் தமிழக முதலமைச்சரின் பக்கம் நின்று அவரை வாழ்த்துவோம் எனவும் கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

What do you think?

மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்