in

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு


Watch – YouTube Click

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

 

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நிதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி… ஈசன் புரொடக்சன்ஸ் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரை வைத்து ஜகஜால கில்லாடி படத்தை தயாரித்தனர்.

இந்த படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் …யிடம் 3 கோடியே 24 லட்சம் 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.

இந்த கடனை 30% வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக வாக்களித்தனர். ஆனால் கடன் தொகை திருப்பி தராத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை நாடியது தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் இதனை விசாரித்த நீதிபதி கடன் தொகையுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கொடுக்கும்’ படி நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

எனவே படத்தின் உரிமையை பெற்று அதனை விற்று கடனை ஈடு செய்ய ஈசன் ப்ரொடக்ஷனுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் படம் இன்னும் முழுமையடைய வில்லை என்று படத்தின் உரிமையை கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட நிதிபதி உத்தரவிட்டார். ஆனால் ஈசன் புரொடக்சன்ஸ் தரப்பிலிருந்து அவகாசம் கேட்ட நிலையில் மனு தாக்கல் செய்ய தவறியதால் வீட்டை ஜப்தி செய்த நீதிபதி உத்தரவிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் முடிவுக்கு வரும் சீரியல்கள்

சாப்பாட்டுக்கே கஷ்டம்… கண்டுக்காத நடிகர்கள்…. 80 ஆயிரம் ரூபாய் கொடுத்த பாலா