நடிகர் கார்த்திக்கு விபத்து
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் PS மித்ரனின் 2022 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற படத்தின் தொடர்ச்சியான சர்தார் 2 வின் நடிகர்களுடன் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார்.
சர்தார் 2 படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. சென்னை பிரஷாந்த் ஸ்டுடியோ…வில் சண்டைக் காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார்.
20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தார். அதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் மைசூரில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் சர்தார் 2 …வில் சில சண்டை காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது.
தற்போது அந்த காட்சிகள் படமாகி கொண்டிருக்கும் நிலையில் படப் படிப்பில் நடிகர் கார்த்திக்கு திடீரென்று காலில் அடிபட்டது.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் சில நாட்கள் ஓய்வு எடுக்கும் படி கூறினர். காலில் வீக்கம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டது.