in

மரக்காணம் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா

மரக்காணம் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா

 

மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வட சமயபுரம் மற்றும் அங்காளம்மன் கோயில்கள். இக்கோயில்களுக்கான 37 ஆம் ஆண்டு பால் சாகை வார்த்தல் விழா மற்றும் 16 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் உற்சவ விழா துவங்கியது. இதிலிருந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் உள்ளிட்ட யாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது..

மேலும் காலை முதல் அம்மனுக்கு சிறப்பு யாகங்களும் அபிஷேக ஆராதனைகளும் செய்தனர். இன் நிகழ்ச்சிகளை தொடர்ந்து சர்வ அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து கோயில் வளாகத்தின் அருகில் மயான கொள்ளை விழா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த மயான கொள்ளை விழாவினைத் தொடர்ந்து அம்மனுக்கு கும்பம் படைத்தல் உள்ளிட்ட பல்வேறு குலதெய்வ படையல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

கும்பகோணத்தில் மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்ரபாணிசுவாமி திருக்கோயில் கொடியேற்றம்

நடிகை சஞ்சனா கல்ராணி போதை வழக்கில் தீர்ப்பு