in

தங்கம் கடத்திய வாகா பட நடிகை கைது


Watch – YouTube Click

தங்கம் கடத்திய வாகா பட நடிகை கைது

ஞாயிற்றுக்கிழமை மாலை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், துபாயிலிருந்து ₹ 12 கோடிக்கு மேல் மதிப்புள்ள 14.8 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் (33) கையும் களவுமாக பிடிபட்டார்.

கன்னடத்தில் இரண்டு படங்கலிலும் தமிழில் விக்ரம் பிரபு..வுடன் வாகா படத்திலும் நடித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திரா ராவ் என்பவரின் இரண்டாவது மனைவியின் முதல் கணவரின் மகள்தான் ரன்யா ராவ். இவர் அடிக்கடி துபாய்க்கு சென்று வந்தவர் போலீஸ் அதிகாரியின் மகள் என்று கூறியதால் விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தவில்லை.

ஆனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் இவரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். கடந்த 15 நாட நாட்களில் நான்கு முறை துபாய்க்கு சென்றவர். ஞாயிற்றுக்கிழமை எமிரேட்ஸ் விமானம் மூலம் பெங்களூருக்கு பறந்தார்.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் 14.80 கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவர் HBR லேஅவுட்டில் உள்ள DRI அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்… துபாயில் இருந்து இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்பில் ரன்யா “தீவிரமாக ஈடுபட்டுள்ளார்” என்று DRI அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

துபாய்க்கு அவர் அடிக்கடி பயணம் செய்வது ஏற்கனவே அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. உளவுத்துறை பெங்களூர் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தனர்.

இரவு 7:30 மணிக்கு ரன்யா ராவ் பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கினார். அதிகாரிகள் அவரை சோதனை இட துணிகளுக்கு இடையே தங்க கட்டிகளை பதிக்கி வைத்திருந்தார் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தற்கொலைக்கு முயன்ற பிரபல பாடகி கல்பனா

கிசுகிசு குறித்து மாதம்பட்டி ரங்கராஜ்