சிகிச்சையில் இருக்கும் நடிகர் அபிநய்
தனுஷ் படத்தின் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்திருக்கிறார் அபிநய்.
ஒருசில விளம்பர ங்களிலும் நடித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் தற்பொழுது வறுமையில் இருப்பதாக அண்மையில் பேட்டியளித்தார்.
வறுமையின் காரணமாக அம்மா உணவகத்தில் தான் தினமும் உண்கிறேன் என்று கூறினார்.
சாப்பாட்டிற்கே வழி இல்லாத காரணத்தால் உடல் நல கோளாறு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.