in

ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா இரண்டாம் திருநாள் பல்லக்குத் பவனி

ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா இரண்டாம் திருநாள் பல்லக்குத் பவனி

 

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா இரண்டாம் திருநாள் பல்லக்குத் பவனி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு உற்சவர் தெய்வங்கள் பலக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக கோவில் திருநாள் மண்டபத்தில் உற்சவர் விநாயகர் பெருமான் ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று நட்சத்திர தீபம் கும்ப தீபம் ஏக முக தீபம் காண்பித்து சோடச உபச்சாரங்கள் நடைபெற்றன. நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழுமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து தெய்வங்களை வாகனங்களில் எழுந்தருள செய்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

மின்னொழியில் மங்கள வாத்தியங்களுடன் நகர் வளம் வந்த தெய்வங்களுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு மாசி மாத வெள்ளி கிழமை சிறப்பு அலங்கார ஆராதனை

பிரிவிற்கு இதுதான் காரணம்