திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 பகுதிகளில், போக்குவரத்து, மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் மின்சார துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், நாகல் நகர் ரவுண்டானம், நத்தம் ரோடு போன்ற 12 பகுதிகளில் சாலை தடுப்புகள், தெருவிளக்குகள், பூங்காக்கள் மற்றும் ரவுண்டானாக்கள் ஆகியவற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் சாலை போக்குவரத்து, தெரு விளக்குகள், போக்குவரத்து சிக்னல் ஆகியவை செயல்படுகிறதா என்பது குறித்து ஏற்கனவே ஆய்வு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக துறை அதிகாரிகளுடன் இன்று மீண்டும் ஆய்வு செய்து வருகிறோம்.
மொத்தமாக 12 இடங்களில் ஆய்வு செய்து இருந்தோம். அதன்படி தற்போது பேருந்து நிலையம் அருகே வேலைகள் தொடங்கியுள்ளது.
மேலும் சாலை தடுப்புகள், நாகல் நகர் ரவுண்டானம், பூங்காக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து மரங்கள் நடுவது போன்ற சிறிய பணிகளை தொடங்கியுள்ளோம்.
சரியாக 2 மாதங்களில் திண்டுக்கல் மாநகராட்சி முழுவதும் தெருவோரங்களில் இருக்கின்ற இடங்கள், போக்குவரத்து ரவுண்டானம், சாலை தடுப்புகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை சரி செய்யப்படும் என்று கூறினார்.