in

காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் முத்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் முத்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் முத்து சப்பரத்தில் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் பரிபூரண அனுகிரகத்துடன் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் அனுதினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் 6 ம் நாள் காலை அம்பாள் முத்துச்சப்பரத்தில் மல்லி விருச்சி உன்கிட்ட வண்ண வாசனை மலர் மாலை அணிவித்து சிகப்பு பட்டு உடுத்தி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசன சபா சார்பில் ஆலய கோபுரம் முன்பு லைன் கோகுல கிருஷ்ணன் மற்றும் குமார் ஏற்பாட்டில் சிற்றுண்டி வழங்கப்பட்டது சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கும் தீபாரதனைகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து சங்கர மடம் முன்பு காமாட்சி சங்கரமடம் வரவேற்பு குழு சார்பில் ஜீவானந்தம் தலைமையில் Omva டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் மோகனசுந்தரம் வெங்கடலட்சுமி. டாக்டர் அபி ஆகியோர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் கோடீஸ்வரன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் கங்கைகொண்ட மண்டபதியில் ஆர் எஸ் எம் கிருஷ்ணன் மற்றும் தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் அன்னதான வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு மேள தாளங்களுடன் ஆலயத்திற்கு எழுந்தருளினார் இவ்விழாவில் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேஸ ஐயர் . சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்ல விஸ்வநாதர் சாஸ்திரி நிர்வாகி கீர்த்திவாசன்.ஸ்தானியர்கள் கார்த்திக் சாஸ்திரி. ஸ்ரீதர் சாஸ்திரி. கோபி சாஸ்திரி சங்கர் சாஸ்திரி. ஷியாமா சாஸ்திரி நடராஜ சாஸ்திரி ஸ்ரீராம் சாஸ்திரி மற்றும் ஆலய மணியக்காரர் சூரி ஆகியோர் பொதுமக்களுடன் மற்றும் பக்தர்களுடன் இணைந்து விழா வினை சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள் கூறிய நடிகர் விஜய்

சூர்யா 45 மாஸ் Update