பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்….
சாதனை பெண்மணிகள் போன்று வேடமணிந்தும் ,சிலம்பம் சுற்றி அசத்திய மாணவிகள்……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவி அபிதா வரவேற்று பேசினார்.
கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
திருமதி.ஜோதி கலியமூர்த்தி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக சங்கீதா கலந்து கொண்டு பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் கல்வி பாதுகாப்பு பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இதில் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிலம்பம்,சாதனை பெண்களைப் போன்று வேடமணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்தனர். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டிக் கொண்டாடினர்.
முடிவில் இரண்டாம் ஆண்டு மாணவி ராபியத்துள் பசிரியா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.