in

தஞ்சாவூரை அடுத்த கரந்தை புற்று மாரியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி முளைப்பாரி ஊர்வலம்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரந்தை புற்று மாரியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி யானைமேல் புனித நீர் குடம் எடுத்து வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்.

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு புற்று மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. வரும் 9ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி புலியாட்டம், மயிலாட்டம், தாரை தப்பட்டை என இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். மேலும் யானை மேல் புனித நீர் குட ஊர்வலம் நடைபெற்றது

What do you think?

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

தஞ்சை திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு போட்டி