தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
வெற்றி பெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடிசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
இப்போட்டியில் தஞ்சை திருச்சி தேனி திண்டுக்கல் மதுரை அரியலூர் பெரம்பலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 காளைகள் பதிவு செய்து அழைத்து வரப்பட்டுள்ளன
350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முறையே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க பட்டனர்
6 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகளாக எவர் சில்வர் பாத்திரம், கட்டில். சைக்கிள். டிரஸ்ஸிங் டேபிள் வழங்கப்பட்டு வருகிறது