in

கடலூர் கஞ்சா விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, கடும் நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, கஞ்சாவை உபயோக படுத்தினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் கஞ்சா ஏற்றி வந்த காரை மீனாட்சிபேட்டை அருகே அப்பொழுது அவ்வழியே வந்த சொகுசு காரை மரித்து சோதனையில் ஈடுபட்டபோது காரில் கஞ்சா கொண்டுவரபட்டது தெரியவந்தது..

அதனை தொடர்ந்து சொகுசு காரில் வந்த நான்கு நபர்களை பிடித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில்,குறிஞ்சிப்பாடியை சேர்ந்த, நவீன் (வயது 27) அய்யப்பன் (வயது 26) ஒடிசா மாநிலத்தை சேர்ந்த,தீபா சீன (30) நவீன் பத்ரு (வயது 27)
என தெரியவந்தது அவர்களிடமிருந்து ஆறு மூட்டைகளில் 10.5 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தனர்…

மேற்கொண்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து,

குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் அவர்கள் செய்தியாளர் சந்தில் கூறும் பொழுது, கடலூர் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கினாலோ, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டாலோ, கஞ்சாவை உபயோகித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும், கடலூர் மாவட்டத்தில் 27 பேர் மீது கஞ்சா வழக்கு பதியபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்,

மேலும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அவர்கள் சன்மானங்களை வழங்கி பாராட்டினார்..

What do you think?

பாபநாசத்தில் காவல்துறை மற்றும் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழா கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகன வீதியுலா