in

ரத்த புற்று நோய்…யால் போராடும் கராத்தே உசேனி… கடைசி ஆசையை நிறைவேற்ற கோரிக்கை…


Watch – YouTube Click

ரத்த புற்று நோய்…யால் போராடும் கராத்தே உசேனி… கடைசி ஆசையை நிறைவேற்ற கோரிக்கை…

 

கராத்தே உசேனி கராத்தே பயிற்சி கொடுப்பவர் திரைபடங்களிலும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளும் தோன்றி இருக்கிறார். இவருக்கு ரத்த புற்று நோய் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கன் கல்லூரியில் விவேக்..குடன் படித்தவர். படிக்கும் பொழுதே கராத்தே மீது உள்ள ஆர்வத்தால் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். உசேனின் முதல் திரை அறிமுகம் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் திரைப்படம்.

அண்மையில் utube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் எனக்கு ரத்த புற்று நோய் இருகிறது. இது என்னுடைய ஜெனிடிக் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது வைரஸ்சால் வந்திருக்கலாம் ஒரு நாள் வாழ்வதற்கு ரெண்டு யூனிட் ரத்தமும் Platelets வேண்டும் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிருடன் இருப்பேன்.

எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தவுடன் பேன்ஸ் மற்றும் பிரண்ட்ஸ் எல்லாம் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் நான் மன தைரியதுடன் இருக்கிறேன். நான் 10 நாள் வாழ்தல் கூட என்ன சாதிக்கலாம் என்று யோசிபேன்.

உயிர் வாழ Possibilities இல்லை, கடவுள் கொடுத்த தை நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். என்னுடைய ஒரே ஆசை என்னுடை மாணவர்கள் ஒருத்தராவது ஒலிம்பிக் மெடல் வாங்கணும்.

நான் Treatment…இக்கு யாரிடமும் கைஏந்த மாட்டேன். நான் கராத்த பயிற்சி கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் பவன் கல்யாண் இங்கு தான் கராத்தே பயிற்சி எடுத்திருந்தார்.

எனவே இந்த இடத்தை வாங்கிக் என் Treatment…இக்கு பணம் கொடுக்க வேண்டும் என்னுடைய சிலையை இங்கே வைக்க வேண்டும் அப்படி செய்தால் அவர் உண்மையான மாணவன்.

அதைப்போல் விஜய்க்கும் ஒரு கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் அப்படி செய்தால் அவர் உண்மையான தலைவர், என்று தனது கடைசி ஆசை மற்றும் கோரிக்கை யை முன் வைத்து இருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சை வடக்குப்பட்டு அருள்மிகு குடுமி தேவர் பெருமான் கோவில் கும்பாபிஷேகத்தை ஓட்டி முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

நடிகை வைஜயந்திமாலா நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்