in

சின்ன நெற்குணம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலாம்பா சமேத ‌ ஸ்ரீ ஒண்டி அய்யனாரப்பன் ஆலய கும்பாபிஷேகம்

சின்ன நெற்குணம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலாம்பா சமேத ‌ ஸ்ரீ ஒண்டி அய்யனாரப்பன் ஆலய கும்பாபிஷேகம்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் சின்ன நெற்குணம் ஸ்ரீ பூரணி ஸ்ரீ புஷ்கலாம்பா சமேத ‌ ஸ்ரீ ஒண்டி அய்யனாரப்பன் ஆலய கும்பாபிஷேக விழா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆலய கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

பின்னர் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி செலுத்தி பஞ்சமுகத்திபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மூலவர்கள் ஸ்ரீ பூரணி, ஸ்ரீ புஷ்ப கலாம்பா, ஸ்ரீ ஒண்டி அய்யனாரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட கலச நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் சின்ன நெற்குணம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

பாமக-வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ்வெளியிட்டார்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகை