in

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா

 

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

மதுரை மார்ச் 10, மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிறப்பு கொண்டதுமான மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல துவங்கியது.

இதனையடுத்து சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் விழாவின் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் கோவில் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மைதருவார் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளியதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது

விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மணக்கோலத்தில் அருள்பாளித்த மத்தியபுரியம்மன் மற்றும் சுவாமி நன்மைதருவார், பிரியாவிடை ஆகியோரை கண்குளிர தரிசனம் செய்தனர்

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நாளை (11.03.25) நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

What do you think?

கிராம விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய புனித பயணம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு