in

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய புனித பயணம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய புனித பயணம் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

 

கச்சத்தீவு அந்தோனியார் ஆலய புனித பயணம் மேற்கொள்ள பைபர் கிளாஸ் பொருத்திய படகில் சென்று வர அனுமதி தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

தற்போது இலங்கை வசமுள்ள கட்சதீவு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவானது இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அரசு அனுமதியோடும் கட்டுப்பாடோடும் புனித அந்தோனியாரை வழிபடுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த வருடம் மார்ச் மாதம் 14 மற்றும் 15.03.2025 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பைபர் படகு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பைபர் படகு அனுமதிக்க கோரி பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் 06.03.2025 தேதியன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் மீண்டும் பரிசீலனை செய்து அனுமதிக்க வேண்டும் என மறுஉத்தரவு பெற்றுள்ள நிலையில் 10.03.2025.

இன்று மாவட்ட ஆட்சியரிடம் பைபர் படகுகள் கச்சத்தீவு அந்தோணியார் புனித பயணத்திற்கு அனுமதி தர வேண்டும் என ராமேஸ்வரம் பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பட்டங்கட்டி சமுதாயம் ஓலைக்குடா கிராம நிர்வாகத்தின் தலைவர் ஜெரோன்குமார் தலைமையில் மனுஅளிக்க வந்தனர்.

What do you think?

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந்திருவிழா

சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்