சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்
நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்ற சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்; மேளதாளம் முழங்க, யானை மேல் கோலாகலமாக கொண்டுவரப்பட்ட கலச தீர்த்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகை நாணயக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுதினம் 12,ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்காக சாபம் தீர்த்த விநாயகர் கோவிலில் இருந்து இன்று புனித நீர் யானையில் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரானது இன்று யானை மேல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதில் கேரளா பாரம்பரிய பஞ்சரி மேளத்திற்கு ஏற்றவாறு கதக்களி நடன கலைஞர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர்.
வெகு விமர்சையாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில் நடன குதிரைகள் அதன் கால்களை உயர்த்தி நீண்ட நேரம் நடனம் ஆடி பக்தர்களை பரவசப்படுத்தியது. நாகை சுவர்ண விநாயகர் கோவில் புனித நீர் ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.