in

மன்னார்கோயில் அருள்மிகு இராஜகோபால சுவாமி – குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா

மன்னார்கோயில் அருள்மிகு இராஜகோபால சுவாமி – குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா

 

மன்னார்கோயில் அருள்மிகு இராஜகோபால சுவாமி – குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயிலில் அருள்மிகு இராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. சுமாா் 2000 வருடங்கள் பழமையான இத்திருக்கோவிலில் மூலவராக வேதநாராயணப்பெருமாள் நின்ற அமா்ந்த சயனம் என மூன்று திருக்கோலங்களில் அஷ்டாங்க விமானத்தின் கீழ் வா்ணகலாப திருமேனியில் அருள் பாலிக்கின்றாா்.

இத்தலத்தில் சேரநாட்டு மன்னரின் மகனாக அவதரித்து குலசேகர ஆழ்வாராக மாறி பின் முக்திபெற்ற இடம் ஆகும். குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற தலமாதலால் அவருக்கு இங்கு சுவாமிக்கு முன்பு இடப்புறம் தனியே வெளிப்பிரகாரத்தில் கொடி மரத்துடன் கூடிய தனிச்சன்னதி உள்ளது.

குலசேகரஆழ்வார் திருநட்சத்திரமான மாசி புனா்பூசம் த்தையொட்டி 10 தினங்கள் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகின்றன. 10ம் நாளான இன்று காலையில் நடைதிறக்கப்பட்டு காலைசந்தி பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாகுதியுடன் ஸ்ரீ ஆண்டாள் இராஜகோபாலா் சமேத கருடாழ்வாா் மற்றும் குலசேகரஆழ்வாா் க்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவில் தெப்பத்திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. இதையொட்டி மாலையில் ஸ்ரீ ஆண்டாள் இராஜகோபாலா் சமேத கருடாழ்வாா் தோளுக்கு இனியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். எதிா்சேவையில் குலசேகரஆழ்வார் பெருமாளை பாா்த்தபடி எழுந்தருள ஆச்சாாிய புருஷா்கள் பிரபந்தம் பாடினா்.

பின்னா் குலசேகர ஆழ்வாா் இராஜகோபாலருடன் தெப்பத்திற்கு வீதி ஊா்வலமாக ஏழுந்தருனினா். சிறப்பாக பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள், தாயாா் ஆழ்வாா் எழுந்தருளி கற்பூர ஆரத்தி நடைபெற்றது. தெப்பம் 12 சுற்றுகள் வலம் வந்து பின்னா் ஆலயம் வந்தடைந்தனா். ஆயிரக்கனக்கான பக்தா்கள் தெப்ப திருவிழாவினை தாிசித்து மகிழ்ந்தனா்.

What do you think?

சுவர்ண விநாயகர் கோயில் புனித நீர் ஊர்வலம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித் திருவிழா சிவப்பு சாத்தி