பச்சநாயக்கன்பட்டி ஸ்ரீ சத்குரு சித்தர் கோவிலில் 11 ஆம் ஆண்டு குருபூஜை
பச்சநாயக்கன்பட்டி ஸ்ரீ சத்குரு சித்தர் கோவிலில் 11 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பச்சைநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சத்குரு தபோவனம் அருள்மிகு ஸ்ரீ சத்குரு சித்தர் திருக்கோவிலில் 11ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
முன்னதாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் சித்தர் சற்குருநாதர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பஞ்சமுக கற்பூர ஆராதனை மற்றும் ஏக முக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சத்குரு சுவாமியை வழிபட்டனர் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடந்தன பல்வேறு பகுதியிலிருந்து வந்த சிவனடியார்களுக்கு வஸ்திரம் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி மடிப்பிச்சை ஏந்தி வழிபாடு செய்தனர் .