in

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை பகுதியில் அமைந்துள்ள பொங்கலாவூலு கருப்பசாமி, பல்லகுண்டம்மள் , பேரக்ம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முதல் நாளில் சித்தார் பட்டியில் உள்ள திருக்கோவில் பூர்வீக வீட்டிலிருந்து பல்வேறு புனித தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கோவில் உள்ள பாலக்கோம்பை கிராமத்துக்கு தேவராட்டத்துடனும் ஐதீகா பாடல்கள் பாடியும் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் வில்வ பூஜை கூடைகளும் தம்பரன் மாடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூர்விகா கோவிலிருந்து திருக்கோவில் உள்ள இடத்து வரை பூர்ணா மரியாதையுடன் அழைத்து வரப்பட்டது.

யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில் பொங்கலாவூழு கருப்பசாமி , பல்லகுண்டம்மாள் , பேரக்கம்மாள் ,புனித கம்பங்களுக்கு ஐதீக முறைப்படி மந்திரங்கள் ஓதி பல்வேறு திருக்கோவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது இந்த திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இராஜ கம்பளத்தார் பெதமங்கராஜ நல்லிமன்ன வகையாரார் செய்திருந்தனர்.

What do you think?

பச்சநாயக்கன்பட்டி ஸ்ரீ சத்குரு சித்தர் கோவிலில் 11 ஆம் ஆண்டு குருபூஜை

கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருவிழா