in

புதுச்சேரி….சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ்-திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு…

புதுச்சேரி….சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ்-திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபை 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் நேற்று துவங்கியது. இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது.

இதில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பேசும்போது, பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களுக்கும் எந்த நிவாரணம் வழங்கப்படவில்லை என பேசினார்.

இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வீடு இழந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதை சுட்டி காட்டினார்.

திமுக- காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட பெரும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.

வீடுகள் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நிதியையும் கொடுக்கவில்லை.

ஆனால் அரசு தவறான தகவல்களை சட்டமன்றத்தில் கூறுவதாக கூறி ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

What do you think?

நாமக்கல் அடுத்தசேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா பெருமாள் திருக்கல்யாண வைபவம்

ராஷ்மிகா மந்தனா…வுக்கு மிரட்டல்