அவதார் பட வாய்ப்பை மறுத்த நடிகர்
உலக அளவில் வெற்றி பெற்ற அவதார் படத்தின் படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது.
அவதார் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பிரபல நடிகர் மறுத்துவிட்ட தகவலை தற்பொழுது கூறியுள்ளார்.
நடிகர் கோவிந்தா ….சில வருடங்களுக்கு முன்னால் என்னை அழைத்த ஹாலிவுட் நடிகர் இயக்குனர் James Cameron (ஜேம்ஸ் கேமரன்) இரவு உணவிற்கு அழைத்த சென்று என்னிடம் படம் குறித்து பேசினார்.
அப்படத்தில் வரும் கதாநாயகன் மாற்றுத்திறனாளி என்றும் அந்த படத்திற்கு அவதார் என்று பெயர் வைக்க போகிறேன் என்று கூறினார்.
அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 18 கோடி சம்பளம் தருவதாக கூறினார். 410 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றார் ஆனால் அவதார் படத்தில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.
அந்த படத்திற்காக அதிக நாட்கள் உடலில் வண்ணம் பூசி நடிக்க வேண்டும் அந்த படம் முடிந்து நான் டப்பிங் பேசுவதற்குள் மருத்துவமனையில் தான் படுத்து கிடப்பேன் என்று கூறியுள்ளார்.