திருவாடானையில் சற்று முன் பெய்து வரும் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.
வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.