கூலி படத்தின் Teaser மார்ச்….?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரவிருக்கும் அதிரடி திரில்லர் படமான கூலி.
படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ஜூனியர் எம்ஜிஆர், அமீர் கான் (சிறப்புத் தோற்றம்), பூஜா ஹெக்டே (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் கூலி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகிறார்.
கூலி படத்தின் டீசர் இந்த வார இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 14 ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளில் படத்தின் ஒரு காட்சியை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இருப்பினும், டீசரின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
கூலி பட தயாரிப்பாளர்களும் வெளியீட்டு தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் விரைவில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும்.