in

உயிருக்குப் போராடுற நேரத்துல எதற்காக புகைப்படங்களை எடுத்திங்க ஊடகங்களை கடுமையாக சாடிய பாடகி கல்பனா

உயிருக்குப் போராடுற நேரத்துல எதற்காக புகைப்படங்களை எடுத்திங்க ஊடகங்களை கடுமையாக சாடிய பாடகி கல்பனா

பாடகி கல்பனா ராகவேந்தர் சமீபத்தில் ஊடகங்களுடன் உரையாடினார், உயிருக்குப் போராடியபோது ஊடகங்கள் என் முகத்தில் இருந்த துணியை விலக்கி படங்கள் எடுத்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மயக்கமடைந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறபட்டது, பின்னர் கல்பனா போலீசாரிடம், தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, தூக்கம் வராமல் இருந்ததால் கூடுதலாக 10 மாத்திரைகளை உட்கொண்டேன்.

இதனால் சுயநினைவை இழந்தேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே, தற்கொலை முயற்சி என்று செய்திகள் வெளியிடபட்டது, மேலும் தனது கணவர் மற்றும் மகளுடனான பிரச்சனை ….யால் தூக்க மாத்திரை எடுத்ததாக செய்திக்கள் வெளியானது அது முற்றிலும் பொய்.

“நட்சத்திரங்கள் அல்லது மக்கள் பற்றிய ஊகங்கள் அடிபடையிலான செய்திகளை யாரும் வெளியிடக்கூடாது என்ற விதியை உருவாக்குங்கள். சினிமா..கார்களுடைய பர்சனல் உங்களூக்கு எதுக்கு , “சினிமாக்காரங்கனா உங்களுக்கு மட்டமா தெரியுதா?.. எதுக்கு எங்க மேல சேத்த வாரி அடிக்கிறீங்க” ன்னு கொந்தளித்தார் கல்பனா.

நான் உயிருக்குப் போராடும் நிலையில் இருந்தேன், பின்னர் பத்திரிகைகள் என் உதவியாளரிடம், தயவுசெய்து காத்திருங்கள், நாங்கள் அவரை புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இவ்வளோ தரக்குறைவாக நடந்துகொள்கிறிர்கள். நாளைக்கு நான் ஒரு நல்ல விஷயம் செய்தால் இப்ப இருக்கிற மீடியா… அத்தனை பேரும் என் பின்னாடி இருபிங்களா? தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், நல்ல விஷயங்களுக்கு எங்களுக்கு ஊடகங்கள் தேவை, எப்போது உங்கள் ஆதரவு எனக்குத் தேவை, உங்களால் தான்’ நான் மக்களிடம் சென்றடைந்தேன், அவர்கள் என் பாடலைப் பற்றி அறிந்து கொண்டார்கள் …நீங்க இல்லாம நாங்கள் இல்லை எல்லோரும் சேர்ந்து நல்ல விஷங்களை உருவாக்குவோம் என்று ஊடகங்களை கடுமையாக சாடினார்.

What do you think?

கூலி படத்தின் Teaser மார்ச்….?

பாண்டியன் 2 சீரியல் மாற்றம்